திருமணம் என்பது இருவர் சார்ந்தது.
ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
1 ம் பாவம் ஜாதகரையும்
7 ம் பாவம் எதிர் பாலினத்தை குறிக்கும்,
அதாவது ஆண் என்றால் மனைவியையும் , பெண் என்றால் கணவனையும் குறிக்கும்.
ஆகையால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க 1 ம் பாவத்திற்கு (லக்னத்திற்கு)
8, 12 ம் பாவமான 8,12 ம் பாவத்தையும்,
7, ம் பாவத்திற்கு 8,12 ம் பாவமான 2,6 ம் பாவத்தையும் 7 ம் பாவம் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் , அதாவது 7 ம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 2,6,8,,12 ம் பாவத்தை தொடர்பு கொள்ளாமல் இருப்பது சிறப்பு.
2,6,8,12 என தொடர்பு கொண்டு இருக்கும் போது, களத்திரகாரகன் செவ்வாய், சுக்கிரன் (பெண்ணுக்கு செவ்வாய், ஆணுக்கு சுக்கிரன் என்று இருந்தபோது பொதுவான தாம்பத்திய இன்பத்திற்கு காரகன் சுக்கிரன்)
6,8,12 க்கு 12 ம் பாவமான 5,7,11 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர் அல்லது ஜாதகி பிரச்சினை இருக்காது இருந்தாலும் அதில் இருந்து விடுபடுவார்.
ஏனெனில் 7 ம் பாவம் சமூகம் மற்றும் தொழிலைக் குறிக்கும் என்பதால், 2,6,8,12 தொடர்பு வெளிவட்டார பழக்கத்தில் அல்லது வியாபாரம் நிமித்தம் பிரச்சினை வரும்.
7 ம் பாவ முனை உப அதிபதி எந்த விதத்திலும் 6,8,12 ம் பாவத்திற்கும் உப நட்சத்திரமாக வரக் கூடாது,
ஏன் என்றால் 7 ம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 7 ம் பாவத்திற்கு சாதகமான 135,7,11 ம் பாவத்தை தொடர்பு கொண்டாலும்,
7 ம் பாபவமுனை அதிபதியின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களின் தசை புத்தி காலங்களில் பிரிவினை மற்றும் வழக்குகளை ஏற்படுத்தி விடும்.
மேற்கண்ட கிரகத்தின் நட்சத்திரம்
உப நட்சத்திரம்
உப உப நட்சத்திரத்தில்
4 அல்லது 5 கிரகங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது..
ஆகையால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க களத்திரகாரகன் செவ்வாய், சுக்கிரன், 7 ம் பாவம் மற்றும் நடப்பு தசை புத்திகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு 7 ம் பாவத்திற்கு சாதகமான 1,3,5,7,9,11 ம் பாவத்தை தொடர்பு கொள்வது சிறப்பு.
7 ம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 தொடர்பு கொள்ளும் நிலையில்
சுக்கிரன் அல்லது செவ்வாய் மற்றும் குரு. தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 1,7,3,9,5,11ம் பாவங்களை தொடர்பு கொள்வது அவசியம் ஆகும்.
7 ம் பாவ முனை உப அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் தொடர்பு 6,9 முதல் திருமணம் முறிந்து இரண்டாம் திருமணம்.
7 >> 8ம் பாவ தொடர்பு இரண்டாம் திருமணம் செய்ய முடியாது.
ஏனெனில் இரண்டாம் திருமணம் என்ற 9 ம் பாவத்திற்கு 8 ம் பாவம்.. 12 ம் பாவமாக வருவதால்,
முதல் திருமணம பந்தத்தை முறிக்க முடியாமல் திருமண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு அல்லல் படும் நிலை.
7 >> 9,11 ம் பாவ தொடர்பு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது தகாத உறவு.
7 >> 9,8, ம் பாவ தொடர்பு இரண்டாம் திருமணம் செய்தும் அல்லல் படும் நிலை ஏற்படும்.
9க்கு 8ம் பாவம் 12 ம் பாவம் என்பதால்...
Jothisha Acharya
Kaniprakash M
8056245107
↣